Saturday, October 8, 2011

கட்டபொம்மன் வசனம் உண்மையானது அல்ல...!!!


ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நுõல் அது.

அதில் —
கப்பத் தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டமொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.


ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.
 
இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன். அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில் கட்டப்பொம்மன், ஜாக்சனை சந்தித்தார்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா) மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பணபாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கை கலப்பில் கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டப் பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டப்பொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)

கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15,1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது.
விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கபட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுõசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.


Post Comment

Monday, October 3, 2011

கண்ணீர் கடல்....!!!

கடல் கடந்த வாழ்க்கை
கடல் நீரைப்போல் 
கண்ணீரை சுமந்து....

தேக்கி வைத்திருக்கிறேன் 
வேதனையாய்
சுனாமி போல வரும் ஒரு நாள்....!!!

அன்புடன்,
குமாரபுரம் யசோதரன்.


Post Comment

Saturday, October 1, 2011

நல்லா சிரிங்கடே......

தாத்தாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
பாட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு

அப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
அம்மாவை பார்த்தால் ஒரு சிரிப்பு

அண்ணனை பார்த்தால் ஒரு சிரிப்பு
தம்பியை பார்த்தால் ஒரு சிரிப்பு

அக்காளை பார்த்தால் ஒரு சிரிப்பு
தங்கையை பார்த்தால் ஒரு சிரிப்பு

பெரியம்மாவை பார்த்து ஒரு சிரிப்பு 
பெரியப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

சித்தியை பார்த்தால் ஒரு சிரிப்பு
சித்தப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

அத்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
மாமா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

அத்தை மகனை பார்த்தால் ஒரு சிரிப்பு 
அத்தை மகளை கண்டால் ஒரு சிரிப்பு 

நண்பனை கண்டால் ஒரு சிரிப்பு 
நண்பியை கண்டால் ஒரு சிரிப்பு 

காதலியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
காதலனை பார்த்தால் ஒரு சிரிப்பு 

குழந்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
கடும் முதியோரை பார்த்தால் ஒரு சிரிப்பு

மனைவியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கணவனை பார்த்தால் ஒரு சிரிப்பு 

கலைஞரை பார்த்தால் ஒரு சிரிப்பு \
அம்மா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு

கனிமொழி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஆ ராசா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

சு சுவாமி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
டி ராஜேந்தரை பார்த்தால் ஒரு சிரிப்பு 

வடிவேலை பார்த்தால் ஒரு சிரிப்பு
விஜய்காந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

சோனியா காந்தியை [[இந்த பெயரை உச்சரிக்கவே எனக்கு வாந்தி வாந்தியா வருது]] பார்த்தால் ஒரு சிரிப்பு
மன்மோகன் சிங்[டி] யை பார்த்தால் ஒரு சிரிப்பு 

கவுண்டமணியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
செந்திலை [[சிபி அல்ல]] பார்த்தால் ஒரு சிரிப்பு  

ஆபீசரை பார்த்தால் ஒரு சிரிப்பு [[பயம்தான்]]
சிபி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

கோமாளி'செல்வாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
இம்சை அரசனை பார்த்தால் ஒரு சிரிப்பு

கவுசல்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
சித்ரா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

கல்பனாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
வானதியை பார்த்தால் ஒரு சிரிப்பு 

சீனா அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
ரத்தனவேல் அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

தமிழ்வாசியை பார்த்தால் ஒரு சிரிப்பு
ஜெயந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

நிரூபனை பார்த்தால் ஒரு சிரிப்பு
விக்கி "தக்காளி"யை பார்த்தால் ஒரு சிரிப்பு

வேடந்தாங்கலை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கவிதைவீதி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

நாய்நக்ஸ்'நக்கீரனை பார்த்தால் ஒரு சிரிப்பு
சத்ரியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

சிரிப்பு போலீசை பார்த்தால் ஒரு சிரிப்பு
டெரர் பாண்டியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

பன்னிகுட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஜெயலானியை பார்த்தால் ஒரு சிரிப்பு

காட்டானை பார்த்தால் ஒரு சிரிப்பு
வெளங்காதவனை கண்டால் ஒரு சிரிப்பு

ரமணி குருவை பார்த்தால் ஒரு சிரிப்பு
சென்னை பித்தன் தல'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

ஸ்ரீ நிசி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
சசிகுமாரை பார்த்தால் ஒரு சிரிப்பு

ஐ ரா ரமேஷை பார்த்தால் ஒரு சிரிப்பு
மகேந்திரனை பார்த்தால் ஒரு சிரிப்பு

சூர்யா ஜீவாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஜீ'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

மேனகா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு
அக்கா'கோமதியை பார்த்தால் ஒரு சிரிப்பு

வெங்கட் நாகராஜை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கோகுலை பார்த்தால் ஒரு சிரிப்பு

கூகுளை பார்த்தால் ஒரு சிரிப்பு
பிளாக்கரை பார்த்தால் ஒரு சிரிப்பு

பேஸ்புக்'கை பார்த்தால் ஒரு சிரிப்பு
பஸ்'சை பார்த்தால் ஒரு சிரிப்பு

டுவிட்டரை பார்த்தால் ஒரு சிரிப்பு
கூகுள் பிளஸ் பார்த்தால் ஒரு சிரிப்பு.......

பாருங்க நண்பர்களே ஒரு மனிதன் எத்தனை பேருக்கு எத்தனை விதமாக சிரித்து வைக்கிறான் என்று, யோசிச்சா ஒன்னுமே புரியலை....!!!

டிஸ்கி : ம்ஹும் இன்னும் நிறைய இருக்கு, நீங்க குனிஞ்சி கல்லை கில்லை எடுத்துரைப் புடாதே, அதான் விட்டுட்டு போறேன்.....

டிஸ்கி : இது சும்மா டிரைலருக்கு, நண்பன் நாஞ்சில் மனோ பெர்மிஷனுடன் அவன் பதிவை போட்டுருக்கேன், தப்பா நினச்சிராதீங்க உங்க ஆதரவு வேண்டும்......

நட்புடன்
நாஞ்சில் அணில்.

Post Comment