Saturday, October 8, 2011

கட்டபொம்மன் வசனம் உண்மையானது அல்ல...!!!


ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நுõல் அது.

அதில் —
கப்பத் தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டமொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.


ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.
 
இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன். அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில் கட்டப்பொம்மன், ஜாக்சனை சந்தித்தார்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா) மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பணபாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கை கலப்பில் கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டப் பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டப்பொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)

கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15,1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது.
விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கபட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுõசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.


Post Comment

13 comments:

  1. முற்றிலும் புதிய தகவல்கள்...!!!

    ReplyDelete
  2. முற்றிலும் புதியதான் தகவலுக்கு நன்றி...

    ஜே.ராஜா முகம்மது அவர்கள் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூலினைப்பற்றி மேலதிக தகவல்கள் அறியவும் அந்த நூலினைப் பெறவும் விரும்புகிறேன்.

    vs.ananthan@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

    நன்றி....

    ReplyDelete
  3. இது அந்நிய நாட்டு சதி!...எனக்கு ஒரு விஷயம் கன்பார்மா தெரியலன்னா எங்க தலீவரு இப்படிதான் சொல்லனும்னு சொல்லி இருக்காரு அண்ணே!

    ReplyDelete
  4. என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க, உங்க எழுத்தப் பார்த்து எதிர்கால சந்ததில நாலு பேரு இது கூட உண்மைதான்னு நம்பி ஆராய்ச்சி பண்ணுவாங்க. ப்ளாக்ஸ்பாட் உள்ளவரைக்கும் நீஙக எழுதிவச்சிருக்கறது இருக்கும்.

    ReplyDelete
  5. புதிய தகவல்தான்....நன்றி!

    ReplyDelete
  6. கட்டபொம்மன் உண்மையில் ஒரு விடுதலை போராட்ட வீரனுமல்ல.. தன் நாட்டு மக்களுக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தலைவருமல்ல....தன் சுயநலனுக்காக மட்டுமே ஆங்கிலேயரிடம் சண்டையிட்டுள்ளான்.. தன் சமூக மக்களை துன்புறுத்திய மோசமான தலைவன்..மக்களே கட்டபொம்மனின் துன்புறுத்தல் காரணமாக ஆங்கிலேய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்..இதற்கான தெளிவான ஆதாரம் உள்ளது. தஞ்சாவுர் தமிழ்ப் பல்கலைகழகத்தின் மூலமாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ”தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்” என்ற புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. புத்தகம் என்னிடம் உள்ளது. முழுக்க முழுக்க ஒருவரின் திறமையான திரைக்கதை வசனத்தால் ஒரு உண்மையான வரலாறு மாற்றப்பற்றுள்ளது...

    ReplyDelete
  7. உண்மை செய்தியை உலகிற்கு கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள், அதே போன்று yasaru கூறுவதும் உண்மைதான்.............மேலும் இவன் மருதநாயகத்தை காட்டிகுடுதவனும் கூட...................இந்த கலைவாணி பய வரலாறெல்லாம் வருது அந்த உண்மை போராளியின் (மருதநாயகம்) வரலாறு வருவதற்கு ஏன் தாமதம் என்று தெரியவில்லை............

    ReplyDelete
  8. கட்டப்பொம்மன் படமென்றல்ல, பல சரித்திர, புராணப் பட வசனங்கள் சம்பவங்கள் யாவும் இட்டுக் கட்டுப்பட்டவையே!
    நமது தமிழ்த் திரைப்படங்களில் சற்று தூக்கலாகவும் இருக்கும், அறிஞர்களும் கண்டு கொள்வதில்லை.

    ReplyDelete
  9. புதிய தகவல் .. நன்றி

    ReplyDelete