Friday, November 4, 2011

அண்ணன் ராதாரவி'யின் லொள்ளு....!!!


அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் திரு ராதாரவி பற்றிய ஒரு பத்தியை ஜூவியில் படித்தேன். ராதாரவியின் அரசியல் தாவல்களைப் பற்றி நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். கடைந்தெடுத்த அரசியல் பச்சோந்தி. ராமதாசை விட ஒரு படி மேல். திரு ராதாவின் மகன் என்பதால் இப்படிச் சொல்ல வேண்டி இருக்கிறது. ராமதாசுக்கு முன் வரலாறு இல்லை. ஆனால் ராதாரவியின் தந்தை எப்படிப்பட்ட தன்மானச் சிங்கம். பிளைமவுத் காரில் வைக்கோல் கட்டுகளை வைத்து அனுப்பி புரட்சி சிந்தனையாளர். அவருக்கு மகனாகப் பிறந்து விட்டு, கட்சிக்கு கட்சி தாவிக் கொண்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் என்ன தோன்றுகிறது தெரியுமா? வேண்டாம் விட்டு விடுவோம்.


ராதாரவியுடன் போட்டோ எடுத்துக் கொண்டதைக் காட்டினாலே ஃபைனான்சியர்ஸ் கடன் கொடுத்து விடுவதால் தினசரிகளில் அறிக்கை கொடுத்தாராம். எந்த ஃபைனான்சியர் போட்டோவைப் பார்த்து விட்டு, கடன் கொடுக்கின்றான் என்று தெரியவில்லை. அவர்கள் எல்லாம் என்ன முட்டாளா? அறிக்கை விடும் போது யோசிக்க வேண்டாம். கேட்கின்றவர்கள் எல்லாம் என்ன கேனயர்களா? இன்றைக்கு கிராபிக்ஸில் போட்டோ என்ன வீடியோவே எடுக்கலாம். 

அதையெல்லாம் பார்த்து விட்டு பணம் கொடுக்க ஃபைனான்சியர் என்ன பைத்தியக்காரனா? வேடிக்கையாக இல்லை. ராதாரவிக்கு வேறு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. மீடியாவில் வரும் ஒரு சில தகவல்கள் முரண்களை ஏற்படுத்தும்.  நாங்கள் அடிக்கடி மீடியா மாஃபியா என்றுச் சொல்வோம் அல்லவா? அதற்கொரு எடுத்துக்காட்டுத்தான் இது. இனி ராதாரவியின் அறிக்கையை கீழே படியுங்கள். செய்திகளை வெளியிடும் முன்பு யோசிக்க வேண்டாமா பத்திரிக்கைகள்? – பஞ்சு

என் பெயரையோ அல்லது சொத்தையோ காரணம் காட்டி, அதை என் உறவினர் களோ நண்பர்களோ எதற்காவது பயன் படுத்தினால், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்…’ என்று தீபாவளி அன்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார், ராதாரவி.
என்ன விஷயமாம்?


”நான் நடிகர் சங்கச் செயலாளரா இருக்கேன். அதனால், நிறைய நிகழ்ச்சிகளுக்குப் போறேன். விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிறேன். நாகரிகம் கருதி அந்தச் சபையில் எல்லாம் சிரிக்கிறேன், அவங்ககிட்ட அன்பாப் பேசறேன். அந்த மாதிரி நேரத்தில், சிலர் ஆர்வமா அதை போட்டோவா எடுத்துக்கிறாங்க.  


எனக்கு அதிகப் பழக்கமே இல்லாத அந்த மாதிரி ஆட்கள்தான், ‘எனக்கு ராதாரவி நல்ல பழக்கம்’னு சொல்லிக்கிட்டு, ஒரு சில ஃபைனான்ஸியர்களிடம் பணம் வாங்கிடுறாங்க. பணம் தந்தவங்க எனக்கு போன் செய்து, ‘உங்களோட ஃப்ரெண்ட்னு சொன்னார். அதான் சார் பணம் கொடுத்தேன்’கிறாங்க. ‘ஏம்பா, இப்போ போன் செய்ற நீங்க, பணம் கொடுக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு போன் பண்ணி விசாரிச்சு இருக்கலாமே..?’னு ஆதங்கப்படுறதைத் தவிர, நான் அதுக்காக என்ன பண்ண முடியும்? தொடர்ந்து இதுபோல சில சம்பவங்கள் நடக்கவே…


 மனசுக்கு உறுத்தலாகித்தான் என் வக்கீலிடம் என்ன செய்யலாம்னு கேட்டேன். அவர்தான் இங்கிலீஷ்-தமிழ் தினசரிகளில் விளம்பரம் கொடுக்கச் சொன்னார். நான் இப்ப ஆளும் கட்சியில் தலைமைக் கழகப் பேச்சாளரா இருக்கேன். தமிழ்நாட்ல அம்மா அப்பழுக்கு இல்லாத ஒரு ஆட்சியை நடத்திட்டு வர்ற இந்தச் சூழல்ல, இதுமாதிரி ஆட்களால என்னோட பேருக்கும் கட்சிக்கும் இழுக்கு வரக் கூடாதுன்னு தெளிவுபடுத்தத்தான் இந்த அறிக்கை!” என்று விளக்கினார் ராதாரவி.




ஓ அழகு.....!!!


நன்றி : அனாதி

Post Comment